Wednesday, July 01, 2026
Tamillifestyle
Tamil Lifestyle
Logo
Home ஆரோக்கியம் அழகு குறிப்புகள் சமையல் ஆன்மீகம் ஜோதிடம் கோயில்கள் பயணம் BMI Calculator Traditional Remedies Dream Meanings Baby Names About Us Contact Editorial Policy
அழகு குறிப்புகள்

நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தால் போதும்...

நீளமான அடர்த்தியான கூந்தலை பெற இந்த 3 விஷயங்களை தவறாமல் கடைப்பிடித்தால் போதும்...

நீளமான அடர்த்தியாக கூந்தல் என்பது ஒவ்வொரு பெண்ணின் விருப்பமாக இருக்கும். ஆனால், தற்போதைய மாறுபட்ட, மாசடைந்த சுற்றுசூழலால் அது சாத்தியமற்றதாக பலருக்கு ஆகிவிட்டது. இருப்பினும், கூந்தல் பராமரிப்பிற்கென்று பெண்கள் அனைவருமே ஏதோ ஒரு விஷயத்தை முயற்சித்து வருகின்றனர். அதிலும், சமூக வலைதளங்களில் பல்வேறு டிப்ஸ் கூறப்படுவதால் அதை முயற்சி செய்ய தயாராக இருக்கின்றனர். ஆனால் எதை செய்தும் உங்கள் தலைமுடி நீளமாகவில்லை என்றால், கவலைப்படத் தேவையில்லை. ஏனென்றால், நம் அன்றாட வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே கட்டாயம் நம் கூந்தல் ஆரோக்கியமான மாறிவிடும். ஆரோக்கிய கூந்தல் என்றாலே அதன் வளர்ச்சியிலும், தோற்றத்திலும் எந்த குறையும் இருந்திடாது. சரி கூந்தல் வளர்ச்சியை தூண்ட உதவும் 3 விஷயங்களைப் பற்றி தான் இப்போது இந்த கட்டுரையிர் தெரிந்து கொள்ள போகிறோம்…

காரசாரமான உணவுகளைத் தவிர்க்கவும்

காரசாரமான உணவுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான். இருந்தாலும், இன்றைய காலக்கட்டத்தில் பலரும் விதவிதமான உணவுகளை ரசித்து உண்ண விரும்புகிறார்கள். அப்படி சாப்பிட வேண்டாம் என்று கூறிவில்லை. அதற்கு பதிலாக உங்களில் உணவில் காரம் மற்றும் எண்ணெயைக் குறைத்து கொள்ள வேண்டியது அவசியம். அப்போது தான் உங்கள் கூந்தல் ஆரோக்கியமாக வளரும். காரசாரமான உணவுகள் உங்கள் முடியின் வளர்ச்சியையும் தடுக்கலாம். நீங்கள் உணவில் அதிக எண்ணெய் மசாலா பொருட்களை உட்கொண்டால் அல்லது துரித, பதப்படுத்தப்பட்ட உணவுகளை அதிகமாக சாப்பிடும் பழக்கம் உள்ளவராக இருந்தால், கட்டாயம் அவற்றைத் தவிர்த்திடுங்கள்.

இந்த ஒரு டீ குடிச்சா போதும் சைனஸ் முதல் வாயு தொல்லை வரை எல்லாத்தையும் விரட்டிடலாம்…

நிறைய தண்ணீர் குடிக்கவும்

உடலில் 60% நீரால் ஆனாது. எனவே, உடலுக்கு தேவையான தண்ணீர் என்பது மிக மிக இன்றியமையாதது. எப்போது நம் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுகிறதோ, அப்போது உடலானது பாதிக்க தொடங்கும். சில நேரங்களில் தண்ணீர் பற்றாக்குறை உங்கள் முடி வளர்ச்சியைக் கூட நிறுத்தி விடும். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்ள வேண்டியது அவசிவயம். உங்கள் முடி நீளமாக வளர வேண்டும் என்ற உங்கள் ஆசை நிறைவேற வேண்டுமெனில், போதிய அளவு நீரை அவ்வபோது அருந்தி கொண்டே இருங்கள்.

இந்த 6 ராசிக்காரர்கள் சுலபமாக எடுப்பார் கைப்பிள்ளையாக மாறிவிடுவார்களாம். உங்க ராசியும் இதுல இருக்கா?

எண்ணெய் மசாஜ்

மனித உடலை போலவே, தலைமுடிக்கும் நிறைய ஊட்டச்சத்து தேவை. கூந்தலுக்கு ஊட்டமளிக்க வேண்டுமெனில், உண்ணும் ஆகாரம் முதல் தலைக்கு பயன்படுத்தும் பொருட்கள் வரை அனைத்தையும் கவனமாக பயன்படுத்தவும். தலை முடிக்கு ஊட்டமளிக்கக்கூடிய எளிய வழி என்றால் அது எண்ணெய் தேய்த்து குளிப்பது. உங்கள் தலைமுடிக்கு வாரத்திற்கு மூன்று முறை எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்யுங்கள். அது உங்களுக்கு நன்மை அளிக்கும். இது உங்கள் முடி வளர்ச்சியை தூண்டுவதோடு, உங்கள் எப்போதும் பொலிவாக ஜொலிக்கும்.

Share this article

A

Admin User

Lifestyle Journalist

A passionate writer covering health, wellness, and cultural topics for the Tamil community.

தினசரி ஒரு நற்சிந்தனை

உடல் எடை கணக்கீடு

BMI அளவை அறிந்து கொள்ளுங்கள்

கணக்கிடு (BMI Test)
திருக்குறள் (Kural of the Day)

இன்றைய விலை
தங்கம் (22k)
1 கிராம்
₹13,100
தங்கம் (24k)
1 கிராம்
₹13,755
வெள்ளி
1 கிராம்
₹245

அடுத்த பண்டிகை

தேடல்…

--days to go
உங்கள் கருத்து (Poll)

நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை முறை டீ/காபி குடிப்பீர்கள்?

அடுத்து வாசிக்க

பொதுவான முடி பராமரிப்பு தவறுகள்: ஆரோக்கியமான கூந்தலுக்கு அவற்றை சரிசெய்வது எப்படி? வாசிக்க →